தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை சீல் வைக்க முயன்றவர்கள் மீது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அத்துடன் தமுமுக மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்திற்கு நேரடியாக சென்று தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகிகளை சந்தித்தார்.மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.ஹனீபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்புச் செயலாளர்கள் எம்.ஷாஜஹான், காதர் மைதீன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.