மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்பு செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன்,தஞ்சை பாதுஷா, காதர் மைதீன் அச்சிரபாக்கம் ஷாஜகான், தமுமுக மாநில செயலாளர்கள் ஏஜாஸ் அஹமது, சிவகாசி முஸ்தபா, தலைமை பிரதிநிதி தர்மபுரி சாதிக்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவுஷாத் மற்றும் மாநில அணி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தர்மபுரி, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் இளைஞரணி கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது. மேலும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கும், இளைஞரணி சகோதரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.