Breaking News

மருத்துவ சேவை அணி மாநில செயற்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணியின் மாநில செயற்குழு, தேவதானப்பட்டியிலுள்ள, தேனி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் திருமண மண்டபத்தில், தமுமுக மாநில தலைவர்  M H ஜவாஹில்லாஹ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

2002 முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகளை செழுமைப்படுத்தி, இதனிலும் வீரியமாக செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட கூட்டப்பட்ட இச்செயற்குழுவில், தேவதானபட்டி தமுமுக சார்பாக, மய்யித்தை குளுப்பாட்டுவது; கஃபன் துணி அணிவிப்பது போன்றவை செய்முறை விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் திரு சுருளிவேல் மற்றும் தலைக்குமரன் ஆகிய இருவரும், காக்கா வலிப்பு நோய்; பாம்பு கடித்தவர்களுக்கான முதலுதவி மற்றும் C P R சிகிச்சை ( cardiopulmonary resuscitation ) எனப்படும் இருதய நோய்க்கான அவசர முதலுதவி சிகிச்சை போன்றவற்றை மேடையில் செய்து காட்டினர்.

முழு முடக்க காலத்தில், மிக அதிக அளவில் குருதி கொடையளித்த, திருப்பூர் (வடக்கு); காரைக்கால் மற்றும் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ” குருதிப் பேரொளி” விருதும்; அதிக அளவிலான கொரோனா சடலங்களை முழு மரியாதையுடன் அடக்கம் செய்த, வேலூர்; ராணிப்பேட்டை மற்றும் மத்திய சென்னை மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, ” மனிதநேய மாண்பொளி ” விருதும், ஏனைய அனைத்து மாவட்ட மருத்துவ சேவை அணி செயலர் மற்றும் பொருளாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தேனி மாவட்ட முன்களப் பணியாளர்களுக்கு, மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக, சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்சியில்  தமுமுக மாநில தலைவர்  M H ஜவாஹில்லாஹ்; மமக பொதுசெயலாளர் அப்துல் ஸமது; தமுமுக பொதுச் செயளாலர்  ஹாஜாகனி; மாநில மருத்துவ சேவை அணி செயளாலர் கிள்ரு; மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் கலீல் ரஹ்மான் ஆகியோருடன், துணைச்செயளாளர் முகம்மதுரபி; பயாஸ் மற்றும் அனைத்து மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மருத்துவ சேவைகளை இன்னும் அதிகப்படுத்துவது; அதிகளவில் இரத்ததான முகாம் நடத்துவது; டயலிஸிஸ் மைய்யங்களை உருவாக்குவது; நடமாடும் இரத்த வங்கி வாகனங்கள் அர்ப்பணிப்பு  போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், சுனாமி துவங்கி, தமிழகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் தமுமுக மருத்துவ சேவை அணியினரின் ஈடில்லாத பங்களிப்பை நினைவு கூர்ந்த தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், ” அரசின் செலவில் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள, வலுவான கட்டமைப்பான மேம்படுத்தப்பட்ட தாலுகா மருத்துவமனைகள்; ஆரம்ப சுகாதார நிலையங்கள்; பொது சுகாதார மைய்யங்கள் போன்றவற்றில், போதுமான அளவில் மருத்துவர்கள்; மருந்தாளுனர்கள்; செவிலியர் மற்றும் பணியாட்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், இன்று அரசு அறிவித்துள்ள மினி கிளினிக்குகள், மேற்குறிப்பிட்டுள்ள அரசு நிறுவனங்களை, தனியார் மயப்படுத்தும் முயற்சிக்கான துவக்கமோ எனும் அச்சம் எழுவதாக ” குற்றம்சாட்டினார்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *