Breaking News

Monthly Archives: January 2021

விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்து 100 நாட்களுக்கு மேலாகத் தலைநகர் டெல்லியில்ன விவசாயிகள் அமைதியான முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாத மத்திய அரசு, தற்போது டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை வீசியும், அவர்கள் …

Read More »

உரிமை காக்க உறுதி ஏற்போம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.

உலகின் மாபெரும் ஜனநாயக நாடான நம் தாய்த் திருநாட்டின் 72வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நன்னாளையே நாம் அனைவரும் குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். உலகின் மகிச் சிறந்த அரசியல் சாசனம் இந்திய அரசியல் சாசனம் என்ற பெருமிதம் நமக்கு எப்போதும் உண்டு. இந்நாட்டை வெள்ளை ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க நடந்த மாபெரும் விடுதலைப் …

Read More »

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமட மீனவர் மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த மீனவர்கள் நாகராஜ், செந்தில் குமார், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் சாம்சான்கேர்வின் ஆகிய நான்கு பேர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை …

Read More »

புற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் வி. சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. மருத்துவர் வி. சாந்தா அவர்கள் மறைவு மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு. தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்ததற்குக் காரணம் மருத்துவர் வி. சாந்தா அவர்களின் அர்ப்பணிப்பை ஆகும். 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டு நோயாளிகளுக்குச் …

Read More »

ஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன். தனது மாணவ பருவம் முதலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்தவர் திரு. பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள், பழகுதற்கு இனிய பண்பாளரும் சிறந்த நாடாளுமன்றவாதியாகவும் விளங்கியவர் பி.எஸ்.ஞானதேசிகன். ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.வாசன் …

Read More »

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமத்திற்கு நாட்டின் பல மாநிலங்களில் உள்ள 8 துறைமுகங்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மிக பெரும் சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

Read More »

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லா கான், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குனங்குடி ஆர்.எம்.ஹனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், மமக துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மமக அமைப்பு செயலாளர்கள் …

Read More »