Breaking News

Yearly Archives: 2021

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: மனிதநேயத்திற்கும், மண்ணை அடிமைப்படுத்தும் மதவெறிப் பாசிசத்திற்கும் இடைப்பட்ட போராட்டமாய் அமைந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமூகநீதி, சமத்துவம், மனிதநேயம், மாநில உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்திக் களம் கண்ட திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியளித்த தமிழகத்தின் …

Read More »

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெற்றி!

பாபநாசம் சட்டமன்ற தொகுதி 26,வது கடைசி சுற்று மற்றும் தபால் வாக்குகள் முடிவில் மனித நேய மக்கள் கட்சி 16,175 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா 85,090 அதிமுக வேட்பாளர் கோபிநாத் 69,626 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ரெங்கசாமி 18774 வாக்குகளும் 26 வது சுற்று முடிவில் பெற்றுள்ளனர். மாயவரம் ஜெ.அமீன் தலைமை நிலைய செயலாளர்

Read More »

கொரோனாவை வென்று உலக மக்கள் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ வகைசெய்வோம்..!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்து செய்தி: உலகமெங்கும் உள்ள உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா இரண்டாவது அலையை வென்று உழைக்கும் வர்க்கம் சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். தங்களின் வாழ்வாதாரத்தை ஈட்டும் அதேநேரத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட வேண்டிய சிறப்பான …

Read More »

சமுதாய கண்மணிகளே..!

அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)… கொரோனாவினால் உயிரிழந்தவர்களை மதங்களைக் கடந்து இறுதி கடமைகளை நமது சகோதரர்கள் உயிரைப் பணயம் வைத்துச் செய்து வருகின்றீர்கள். தினமும் பல உடல்களை அடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமுமுககாரன் எந்த சவாலையும் முறியடிப்பான் என்பதற்கு எடுத்து காட்டாக உங்கள் பணிகள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளும் நமது பணிகளை சிலாகித்து எழுதியுள்ளன. இப்பணியில் இடைவிடாமல் …

Read More »

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினர்!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வடசென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவரின் உடலை ராயபுரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரை சேர்ந்த நபரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம் தெற்கு விழுப்புரம் நகரை சேர்ந்த நபரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அடக்கம் செய்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த …

Read More »

கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் “ரெம்டெசிவிர்” மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், …

Read More »

சமுதாய கண்மணிகளே..!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சிறந்த உடல் நலத்துடனும் சீரான உணர்வுகளுடனும் இக்கடிதம் உங்களை சந்திக்கட்டும் என்று வல்ல இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து தொடங்குகிறேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது மிகுந்த அர்ப்பணிப்புடன் பாசிசத்தை வீழ்த்த உத்வேத்துடன் பணியாற்றிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவான அருள்வளங்களை வழங்க வேண்டும் என்று முதலில் பிரார்த்தனை செய்கிறேன். இறைவனின் அருள்வளம் நிறைந்த ரமலான் நம்மை வந்தடைந்துள்ளது.உலக மக்களுகெல்லாம் வழிகாட்டியாக …

Read More »

பெரியார் நெடுஞ்சாலையின் பெயர் மாற்றம் பாஜகவின் ஆட்டத்திற்கு அடிபணியும் அதிமுக!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னையில் உள்ள ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையின் பெயரை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றம் செய்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. 1979ல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை பெரியார் ஈவேரா நெடுஞ்சாலை என்று மாற்றி அதற்கான ஆணையையும் வெளியிட்டவர் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த திரு. எம்ஜிஆர் அவர்கள், அந்த …

Read More »

ரமலான் முபாரக்…

இந்த ரமலானின் முழு பலன்களை நாம் அனைவரும் அனுபவிக்க இறைவன் கிருபை செய்வானாக. இது வரை வாழ்வில் சந்தித்திராத கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலாக எதிர்கொள்ளும் வகையில் நமது இறையச்சத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்த ரமலானை பயன்படுத்திக் கொள்வோம்.. கொடிய நோயிலிருந்து மனிதகுலத்தை இறைவன் காப்பானாக. எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், தமுமுக

Read More »