Breaking News

Yearly Archives: 2020

இலங்கை அரசைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்களை எரிக்கும்  இலங்கை அரசின் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தனது உரையில் குறிப்பிட்டதாவது: அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் …

Read More »

மக்கள் உரிமை (17-23) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… காஷ்மீர் இனி விற்பனைக்கு, அகதிகளாக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் சசிகலா வருகை; அமைச்சர்களின் தர்மசங்கடம் உபி – பசுவதை தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் கொலைத் தாண்டவம் 2002 எனும் “குஜராத் மாடல்!” இறைத்தூதரை அவமதிப்பதா? வெகுண்டெழுந்த முஸ்லிம் உலகம் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகளை விடுதலை செய்க – ஐநா மேலும் …

Read More »

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம் காலந்தாழ்த்தாமல் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலையில் தேவையில்லாமல் காலத்தை வீணாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு எனக் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும் ஒரு …

Read More »

தமிழ்நாடு நாள் விழா கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்ட தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 தோழர்களையும் விடுதலை செய்க! – பேராசிரியர் ஜவாஹிருல்லா

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கொண்டாடினர். கர்நாடகம், காஷ்மீர், ஆந்திரா போன்ற பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. பல மாநிலங்கள் சேர்ந்த இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமைகள் …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவா் இயக்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் 01.11.2020 இராமநாதபுரம் எஸ்.எஸ்.கே கீாின் பீச் ரிசாா்ட்டில் மாநில செயலாளா் வழக்கறிஞா் நூா்தீன் தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக மாநில துணை செயலாளா் கோவை அம்ஜத் குா்ஆன் வசனம் ஓதி துவக்கி வைக்க, மாநில பொருளாளா் தமிம் அன்சாாி வரவேற்றபுரையாற்றினாா்கள். இந்நிகழ்வை மாநில துணை செயலாளா்கள் சுல்பிக்கா் மற்றும் காயல் இா்ஷாத் ஆகியோா் தொகுத்து …

Read More »

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவு மமக இரங்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இன்று மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள் அதிமுகவில் கிளைச் செயலாளராக தொடங்கி மாவட்டச் செயலாளராக பிறகு அமைச்சராக உயர்ந்தவர். இனிமையான குரலில் பாடுபவராக மட்டுமில்லாமல் அனைத்து மக்களுடன் அன்புடனும் தன்னடக்கத்துடனும் பழக கூடிய பண்பாளராக விளங்கினார். …

Read More »

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அடிபணிந்த ஆளுநர் – பேரா.ஜவாஹிருல்லா

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலந்தாழ்த்தி வந்த தமிழக ஆளுநர் இன்று அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது காலந்தாழ்த்திய முடிவென்றாலும் வரவேற்கத்தக்க முடிவாகும். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க நான்கு வாரங்கள் தேவைப்படும் எனத் தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாணவ அமைப்புகள் மற்றும் …

Read More »

பிரான்ஸ் வன்முறைகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

பிரான்ஸ் வன்முறைகளுக்குக் கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நபிகள் நாயகம் பற்றிய கேலி சித்திரத்தை பிரெஞ்ச் பத்திரிகையான சார்லி ஹெப்டே வெளியிட்டிருப்பதும் அதற்கு பிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்ரோன் தலைமையிலான அரசு ஆதரவு அளிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்க கொடுஞ்செயல்கள் ஆகும். பிரான்ஸ் அரசின் இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடி என்ற அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் ஒரு தேவாலயத்தில் புகுந்து …

Read More »

நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 27,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொருளாளர் ஷபியுல்லா கான், மமக பொருளாளர் கோவை உமர், மமக அமைப்புச் செயலாளர் காதர் மைதீன், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Read More »