Breaking News

Yearly Archives: 2020

பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!

ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர தமுமுக சார்பாக, பவானி நகரில்10.11.2020அன்று 60 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய முதியவர் கொரோனா பெருந் தோற்றாள் மரணம் அடைந்தார். அண்ணாரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ சி எம் ஆர் வழிகாட்டுதலின்படி,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பவானி எஸ் முகமது தலைமையில், பவானி நகர தமுமுக சகோதரர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சிக்கந்தர் ஆகியோர் இணைந்து பவானி நகர …

Read More »

புதுச்சேரி அனைத்து கட்சி கூட்டம் மமக பங்கேற்பு

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு சம்பந்தமான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் முதல்வர் V. நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் Nms.சகாபுதீன் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் T. கலிமுல்லா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் …

Read More »

விழி அமைப்பின் சார்பில் தேசிய கல்வி தின கருத்தரங்கம்

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 11-ஆம் தேதி தேசிய கல்வி தினமாக 2008-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழியின் சார்பாக தேசிய கல்வி தின கருத்தரங்கம் இணையதளம் வாயிலாக சிறப்பாக 11.11.2020 அன்று நடைபெற்றது. விழியின் மாநில செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா தலைமையுரையாற்றினார். விழியின் துணைச்செயலாளர் புதுமடம் ஹலீம் வரவேற்புரையாற்றினார். …

Read More »

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாடத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயின் Walking With The Comrade என்ற புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து திடீரென்று நீக்கப்பட்டுள்ளது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் – பாரதீய ஜனதா கட்சியை …

Read More »

மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்

பிரபல மார்க்க அறிஞர்கள் மவ்லவி ஹூசைன் மன்பஈ மற்றும் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் தமுமுக தலைவர் பேராசிரியர்.எம் எச்.ஜவாஹிருல்லா அவர்கள் முன்னிலையில் இன்று 11.11.2020 தமுமுக தலைமையகத்தில் சமுதாய பேரியக்கம் தமுமுகவில் இ ணைந்தனர். இந்நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா,தமுமுக மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான்,கோவை சாதிக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Read More »

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை காஞ்சிபுரம் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்தார். இதனால் நிருபருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் …

Read More »

மக்கள் உரிமை (17-24) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… அமெரிக்க தேர்தல்: வெறுப்பரசியலுக்கு முடிவு கட்டிய முஸ்லிம்கள் அமெரிக்க மோடிக்கு விழுந்த மரண அடி அர்னாப் கோஸ்வாமி என்ற வெறுப்பு ஊடக வியாபாரி சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பனனுக்கு வேறொரு நீதி? ஆளுமையின் வடிவம் பேரா. அ.காதர் பாட்சா பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் மனு அதர்மத்தை வீழ்த்தாமல் சமதர்மம் இல்லை மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை …

Read More »

நெய்வேலி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அடித்துக் கொலை! கொலைக் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார். வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். மறுதினம் காவலர்கள் செல்வ முருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் …

Read More »

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை மாவட்டம் நாகூரிலும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை நாகூர் திருவாரூர் கூத்தாநல்லூர்

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மண்டல செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மண்டல செயலாளா்: J.சையது அபுதாஹிர் DME., வடகிழக்கு மண்டல செயலாளர்: S.அகமது கபீர் DCV., வடமேற்கு மண்டல செயலாளர்: M.சமியுல்லா MCA., LLB., மத்திய மண்டல செயலாளர்: K.அப்பீஸ்கான் B.Com., கிழக்கு மண்டல செயலாளர்: M.முகமது அசாருதீன் B.E., மேற்கு மண்டல செயலாளர்:  S.ஷேக் முஹம்மது DAE., தெற்கு மண்டல …

Read More »