Breaking News

Yearly Archives: 2020

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை   மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான …

Read More »

மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்

UAPA சட்டம், பீமா கொரேகான் வழக்கு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சட்ட விரோத செயல்களால் மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாகக் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பயங்கரவாத சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக் போராட்டம் 18.11.2020 சென்னை திருவல்லிக்கேணியில் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு மரணித்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. நாம் வாழும் காலத்தில் அரசியலில் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்த அரசியல் தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். 1980ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டார். ஜனதா தள கட்சியின் அனைத்திந்திய தலைவர்களில் ஒருவராக …

Read More »

அருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராய் கட்டுரை மீண்டும் சேர்த்தல் தொடா்பாகவும் மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் சம்பந்தமாக சமூகநீதி மாணவா் இயக்க மாநில துணை செயலாளா் சுல்பிக்கா் அவா்கள் தலைமையில் கோாிக்கை மனு துணை வேந்தாிடம் இன்று 16.11.2020 வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இக்கோாிக்கை மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைகழக நிா்வாகம் …

Read More »

“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு

மறக்க முடியாத டிச.6 நீதி பாதுகாப்பு தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறை கும்பலின் உக்கிரமான பயங்கரவாதத்தால் அக்கிரமமான முறையில் வீழ்த்தப்பட்ட டிச.6ம் நாளை நீதி பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது. இறைவன் நாடினால் எதிர்வரும் டிசம்பர் 6.2020 அன்று மாவட்டத் தலைநகரங்களில் தனிமனித இடைவளி உள்ளிட்ட விதிமுறைகளைப் பேணி மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை தமுமுக சார்பில் இன்ஷா …

Read More »

சென்னையிலிருந்து ஹஜ் விமான சேவை தொடர வேண்டும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் – பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா

“புனித ஹஜ்-2021ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. ரூ2 இலட்சத்திற்கு அதிகமான செலவாகும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வோர் வருமான வரித் துறைக்கு வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற பொது விதியின் அடிப்படையில் 2021ல் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வோரும் வருமான வரி தகவல்களைத் தாக்கல் செய்ய …

Read More »

மக்கள் உரிமை (17-25) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… பள்ளிவாசல் நிர்வாகத்தில் பாஜக வா ? பீகார் தேர்தல் படிப்பினைகள் கமலா ஹாரிஸ் வெற்றியும்; பாசாங்குத்தனம் நிறைந்த கொண்டாட்டமும் கொரோனா தடுப்பு மருந்து: முஸ்லிம் தம்பதியினர் சாதனை பிரான்ஸ் அதிபருக்கு கனடா பிரதமர் பதிலடி ஆரூர்புதியவனின் இரண்டு கன்னங்கள்… இரண்டு அறைகள்…. மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-25) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

Read More »

மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி மற்றும்  மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை அஞ்சல் துறையில் பணியாற்றியவர் கொரோனா தொற்றால் 09.11.2020 உயிரிழந்தார்.அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று தமுமுக மாவட்ட செயலாளர் A.சலீம் தலைமையிலான தன்னார்வலர்கள் உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர் இச் சேவையில் அஜீஸ்,இத்ரீஸ்,அமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Read More »