தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்!
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் – இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
* இணையற்ற சமுதாயப்பணியில் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த இயக்கம்.
* சாத்தியமே இல்லை என்று கருதி மூலையில் வீசப்பட்ட இடஒதுக்கீடு கோரிக்கையை கையிலெடுத்து தொடர்ந்து களமாடி 3.5% இடஒதுக்கீட்டை பெற்று சாதித்துக் காட்டிய இயக்கம்.
* அவசர ஊர்தி சேவையில் இந்திய அளவில் முதன்மையான இயக்கம்.
* அடக்குமுறைக்கு எதிராக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கும் ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கை வெளியிடும் இயக்கம்.
* சட்டமன்றத்தில் சமுதாயத்தின் குரலாக ஒலித்து ஆட்சி அதிகாரத்தின் கவனம் ஈர்த்து கடமையாற்றிய இயக்கம்.
* இன்னும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. இறுதி மூச்சு வரை போராட உறுதி பூண்டுள்ளோம்.
* இறையருளால், உங்கள் நல்லாதரவுடன் சமுதாயத்தை அரணாக காத்து நிற்போம்.
* மனமுவந்து பொருளாதாரம் வழங்கி மகத்தான மக்கள் பணியில் துணை நிற்பீர். மறுமை வெற்றியாளர் ஆவீர்.
இப்போது நன்கொடை அளிக்க கிழே உள்ள லீங்கை கிளிக் செய்யவும்