திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 02.12.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் விவசாயிகளை பயங்கரவாதிகளாக நடத்தும் பாஜக மோடி அரசை கண்டித்தும் போராடும் விவசாயிகளிடம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிக்கு அடிமைகளுக்கு மூன்று வேளாண் சட்டைகளை உடனே திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி சார்பாக மாபெரும் ரயில் நிலையம் முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா, மாநில செயலாளர் காரைக்கால் அப்துல் ரஹீம், மாநில விவசாய அணி செயலாளர் H.M.D. ரஹ்மத்துல்லாஹ், தலைமை பிரதிநிதி வெங்கலம் A.ஜபருல்லாஹ், விவசாய அணி மாநில பொருளாளர் O.S. இப்ராஹிம் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான், தமுமுக மாவட்ட செயலாளர் H. நவாஸ்,மமக மாவட்ட செயலாளர் குத்புதீன் விவசாய அணி மாவட்ட செயலாளர் குத்புதீன் ஆகியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் டெல்டா மாவட்ட தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள்,நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.