Breaking News

விவசாயிகளின் உரிமைக் குரலை அடக்குமுறையால் நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி கண்டனம்.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணியின் மாநில செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தங்களின் உரிமைகளையும் வாழ்வாதரங்களையும் முற்றிலும் ஒழித்திடும் நோக்கில் மத்திய பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திருப்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடி வருகின்ற விவசாயப் பெருங்குடி மக்களை அமித் ஷாவின் காவல் துறையும் துணை ராணுவமும் அவர்களின் உரிமைக் குரலை நெறிக்கும் விதத்தில் கண்மூடித்தனமாக தாக்கி வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
களம் கண்டிருக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் முழுமையான ஆதரவையும் மனிதநேய மக்கள் கட்சியின் விவசாய அணி தெரிவித்துக் கொள்கிறது.

“இந்தியா ஒரு விவசாய நாடு விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு” என்று பெருமையோடு பறைசாற்றிக் கொள்ளும் இந்திய நாட்டின் தலைநகரில் விவசாயி தன் உரிமையை மீட்டெடுக்கவும் வாழ்வாதரங்களை காத்திடவும் ஜனநாயக முறையில் போராடும் போது அடக்கு முறையால் அவமானப்படுத்தப்படுகிறான் என்றால் அது நம் தேசத்திற்கே உலகளவில் தலைக்குனிவை ஏற்படுத்தும் என்பதை மத்திய பாசிச அரசு உணர வேண்டும். இது ஜனநாயக தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றே எண்ணத் தோன்றுகிறது.

உலகுக்கு உணவை விளைவித்து தரும் உன்னதமான பணியை செய்து வரும் உழவன் போராடுவது அவனுக்காக மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமானது என்பதை பாசிச அரசு அறிந்து தெளிந்திட வேண்டும்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் ஒழித்திட நினைப்பது உயிரின அழிவின் அறிகுறி.

தற்போது பஞ்சாப் ஹரியான மற்றும் சில மாநில விவசாயிகள் மட்டுமே போராட்ட களத்தில் கூடியுள்ள நிலையிலேயே செய்வதறியாது தடுமாறுகின்ற மத்திய அரசுக்கு, ஒட்டு மொத்த இந்தியாவின் விவசாயிகள் ஒன்று
கூடிவிட்டால் பின்னர் அவர்களின் உரிமைக் குரலை யாராலும் ஒடுக்க முடியாது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே உடனடியாக மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கணணியில் கரை கண்டாலும் கழனியில் களம் கண்டால் மட்டுமே உணவு என்பதை அனைவரும் உணர்ந்து உரிமைக்காக போராடும் உழவனுக்கு உறுதுணையாயிருக்க உறுதியேற்போம்.

வெல்லட்டும் வேளாண் மக்களின் போராட்டம். வீழட்டும் பாசிச சக்திகளின் சதித் திட்டம்.

இவண்

HMD.ரஹ்மத்துல்லாஹ்
மாநில செயலாளர் விவசாய அணி
மனிதநேய மக்கள் கட்சி.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *