Breaking News

திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு திருவாரூர் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை நைனா முஹம்மது,மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது,மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் காரைக்கால் பயாஸ், கிழக்கு மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் பொதக்குடி ஹபிப் ஆகியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில செயலாளர் காரைக்கால் அப்துல் ரஹீம்,தலைமை பிரதிநிதி வெங்கலம் A. ஜபருல்லாஹ்,மாநில விவசாய அணி செயலாளர் H.M.D. ரஹ்மத்துல்லாஹ், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் L. தீன் முஹம்மது, ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் H.நவாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள்,நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Check Also

வேலைக்காகவும், மேற்படிப்பிற்காகவும் வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க கோரி முதலமைச்சருக்கு பேரா.ஜவாஹிருல்லா கடிதம்!

மனிதநேய மக்கள் கட்சி துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: வேலைவாய்ப்புக்காகவும் கல்வி மேற்படிப்புக்காகவும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு கொரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *