Breaking News

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

 

மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்;
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக அதிகரித்து அதனை நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்து, அதில் வழங்கப்படும் குறைந்தபட்சக் கூலியை அதிகரிக்க வேண்டும்;
வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும்;

இரயில்வே, பாதுகாப்புத் துறை, தொழிற்சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் போராட்டம் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மனிதநேய மக்கள் கட்சி மேற்கொள்ளும். மேலும் இந்தப் போராட்டம் மாபெரும் வெற்றியடைய அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *