Breaking News

மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்

UAPA சட்டம், பீமா கொரேகான் வழக்கு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சட்ட விரோத செயல்களால் மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாகக் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பயங்கரவாத சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக் போராட்டம் 18.11.2020 சென்னை திருவல்லிக்கேணியில் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் நடைப்பெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். தோழர்கள் பலர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், தோழமைகள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *