Breaking News

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு மரணித்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது.

நாம் வாழும் காலத்தில் அரசியலில் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்த அரசியல் தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். 1980ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டார். ஜனதா தள கட்சியின் அனைத்திந்திய தலைவர்களில் ஒருவராக அதன் மேல்நிலை குழுவின் உறுப்பிராகவும் பணியாற்றியவர் முஹம்மது இஸ்மாயில். இரு முறை ஆளுநராக ஆகும் வாய்ப்பு வழங்கப்பட்டும் அதனை உதறியவர் முஹம்மது இஸ்மாயில்.

அரசியலை ஒரு தொழிலாக கருதாமல் முழுக்க முழுக்க மக்கள் சேவை என்ற அடிப்படையில் கருதி எவ்வித சமரசமில்லாமல் மக்கள் பணியாற்றிய ஒரு மதிப்பிற்குரிய தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்களாக இருந்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ஜான் மோசஸ் ஆகியோர் சமீபத்தில் தான் நம்மை விட்டுப் பிரிந்தார்கள். அவர்களை தொடர்ந்து முஹம்மது இஸ்மாயிலும் மரணித்திருப்பது பெரும் வருத்தத்திற்குரிய நிகழ்வாக அமைந்திருக்கின்றது.

முஹம்மது இஸ்மாயிலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *