Breaking News

அருந்திராய் நூல் நீக்கம் பல்கலைகழக துணை வேந்தாிடம் சமூகநீதி மாணவா் இயக்கம் கோாிக்கை மனு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராய் கட்டுரை மீண்டும் சேர்த்தல் தொடா்பாகவும் மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் சம்பந்தமாக சமூகநீதி மாணவா் இயக்க மாநில துணை செயலாளா் சுல்பிக்கா் அவா்கள் தலைமையில் கோாிக்கை மனு துணை வேந்தாிடம் இன்று 16.11.2020 வழங்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இக்கோாிக்கை மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பல்கலைகழக நிா்வாகம் உறுதியளித்தது.

அக்கோாிக்கை மனுவில்,

பெறுநர்
உயர்திரு. துணைவேந்தர் அவர்கள்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
அபிஷேகபட்டி, திருநெல்வேலி.

பொருள்: பல்கலைகழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராய் கட்டுரை மீண்டும் சேர்த்தல் – மேலும் சேர்க்க வேண்டிய பாடங்கள் சம்பந்தமாக.

அறிவே அனைத்து ஆற்றலும் என்ற அருமையான நோக்கத்தோடு கால் நூற்றாண்டு கடந்து சிறப்பாக இயங்கி வரும் நமது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை ஆங்கிலப் பாடத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த ,இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரும் சர்வதேச ‘புக்கர்’ விருது பெற்ற கருத்துரிமைப் போராளியுமான அருந்ததி ராய் அவர்களின் வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் “walking with the comrades” என்ற புகழ்பெற்ற நூலின் கட்டுரைப்பகுதி ஏபிவிபி எனப்படும் ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பின் அறிவுக்கு முரணானக் கோரிக்கையை ஏற்று,
எந்த ஓர் ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் அப்பாடம் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இது கல்விச்சுதந்திரத்திற்கும் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் ஒரு மதவாத அமைப்பு விடுத்துள்ள அச்சுறுத்தலாகவே தெரிகிறது.

இதே பல்கலைக் கழகத்தில் மிகச்சிறந்த கல்வியாளரும் சமூகச்செயல்பாட்டாளருமான முனைவர் வே. வசந்தி தேவி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோது இந்நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட விழுமியங்களை மாணவர்களுக்கு உணர்த்தி வலுப்படுத்தியதை பெருமையோடு நினைவு கூர்கிறோம்.

ஒரு பாடத்தை ஆசிரியர்கள் ஆட்சி மன்றக் குழு, மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசிக்காமல் ஒரு வலதுசாரி மாணவர் அமைப்பின் அறிவிற்கும், அறத்திற்கும் முரணான மிரட்டல்தொனியிலான கோரிக்கையை ஏற்று பாடத்திட்டத்தில் இருந்து அறிவார்ந்த ஒரு பாடத்தை நீக்கி இருப்பது அநீதியானது. மேலும் இது அறிவு நாணயமற்ற செயலுமாகும்.

தமிழகத்தின் அறிவுஜீவிகளும் மாணவர்களும் ஏராளமான மக்கள்நல இயக்கத்தினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எனவே,அருந்ததிராய் அவர்களின் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஏற்க வேண்டும் என சமூகநீதி மாணவர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மேலும், இந்தியாவின் அரசியல் நிர்ணய அவையில் “ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கும் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்கே இருக்கிறது” என்று முழங்கிய இதே திருநெல்வேலி மண்ணின் மைந்தரான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் குறித்தும், சுதந்திர போராட்ட தியாகியும் அண்ணல் காந்தியடிகள் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும் ஐஐடி, ஐஐஎம், யூஜிசி ஆகிய உயர்கல்விக் கட்டமைப்புகளை உருவாக்கிய கல்விச்சிற்பியுமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களைப் பற்றிய பாடமும்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட ஆவன செய்ய வேண்டும் என சமூகநீதி மாணவர் இயக்கம் வலியுறுத்துகிறது.

இதன் மூலம் மாணவர்களிடம் தாய்மொழிப்பற்றும் தாய் நாட்டுப் பற்றும் ஓங்கி வளர இப்பாடத்திட்டம் வழிவகுக்கும். அன்புகூர்ந்து எம் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு
வழக்குரைஞர் நூர்தீன்,
மாநிலச் செயலாளர்,
சமூகநீதி மாணவர் இயக்கம்.

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *