Breaking News

புதுச்சேரி அனைத்து கட்சி கூட்டம் மமக பங்கேற்பு

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு சம்பந்தமான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் முதல்வர் V. நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் Nms.சகாபுதீன் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட பொருளாளர் T. கலிமுல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு மனிதநேய மக்கள் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் தங்களது ஆதரவினை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்தாண்டே அதனை நடைமுறைப்படுத்த மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.

தகவல்,
தமுமுக மற்றும் மமக,
புதுச்சேரி மாவட்டம்.

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *