Breaking News

Monthly Archives: November 2020

“விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை மாண்புமிகு பிரதமர் அவர்கள் மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி – வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும்” – திமுக தலைவர் அவர்கள் மற்றும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டறிக்கை.

இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மகத்தான பேரணியை மதிக்காமல், “புராரி …

Read More »

நெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு !

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமுமுக மமக கிளை இன்று அமைக்கப்பட்டது நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் துலுக்கர்பட்டி ஜாவித் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் K.S.ரசூல் மைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார் மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி மாஹின்  மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் சுல்தான் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் ஆஷிக் பாதுஷா துலுக்கர்பட்டி …

Read More »

திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு திருவாரூர் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை நைனா முஹம்மது,மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது,மருத்துவ …

Read More »

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது நிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் புதுசேரி முதல்வர் நாராயணசாமியுடன் தமுமுக மமகவினர் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணியில் தமுமுக பேரிடர் மீட்புக் குழுவினர்.. நிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் முழுமையாக வெள்ளக்காடாக மாறிய …

Read More »

நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக! – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி

தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவிடுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் …

Read More »

மனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்

மதுரை ஒத்தக்கடையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா முன்னிலையில் இணைந்தனர். சேலம் மேற்கு ஜலகண்டாபுரத்தில் தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர் இராமநாதபுரம் கிழக்கு ஆனந்தூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் திருமுடிவாக்கம் பகுதி …

Read More »

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை   மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான …

Read More »

மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்படுவதை கண்டித்து பரப்புரை போராட்டம்

UAPA சட்டம், பீமா கொரேகான் வழக்கு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சட்ட விரோத செயல்களால் மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாகக் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பயங்கரவாத சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக் போராட்டம் 18.11.2020 சென்னை திருவல்லிக்கேணியில் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு மரணித்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. நாம் வாழும் காலத்தில் அரசியலில் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்த அரசியல் தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். 1980ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டார். ஜனதா தள கட்சியின் அனைத்திந்திய தலைவர்களில் ஒருவராக …

Read More »