Breaking News

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சி பாஜக என்று மீண்டும் நிரூபணம்

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளிக்கின்றது.
சமூக நீதிக்கு எதிரான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜகவின் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமே இந்த தீர்ப்பிற்கு வழிவகுத்துள்ளது
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கூட கொள்கை முடிவு எடுக்கும் வரை அளிக்க இயலாது என்று தெரிவிக்க;பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அக்கிரமமான நிலைப்பாட்டின் காரணமாகவே உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீடும் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீடும் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரையில் காலவரம்பின்றி பறிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சமூக நீதிக்கு விரோதமான கட்சியே பாரதீய ஜனதா கட்சி என்பது இந்த விவகாரத்தில் மீண்டும் அம்பலமாகின்றது. இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.
உடனடியாக தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முடிவுகளை எடுத்துப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *