Breaking News

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என அவர் மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 27 அன்று பல்வேறு நாட்டில் வாழும் பெரியாரிய இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள நிகழ்வில் உரையாற்றிய சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது பெரியார் ஏன் சனாதன தர்மத்தை எதிர்த்தார் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் போது மனுநீதி நூல்கள் பெண்களை அடிமைப்படுத்தி கொச்சைப்படுத்துகிறது ஆகையால் பெரியார் இந்த சனாதனத்தை எதிர்த்தார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
ஆனால் இந்த விளக்கத்தை திரித்து அதனைப் பிரச்சினையாக்கி தொல் திருமாவளவன் மீது வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக பாஜக பிரச்சாரம் செய்துவருவது கண்டிக்கத்தக்கது.

தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தும் நோக்கில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அவர்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, தொல் திருமாவளவன் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை காவல்துறையினர் உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள கட்சி

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *