Breaking News

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மமக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

Check Also

புற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான மருத்துவர் வி. சாந்தா அவர்களின் மறைவு வேதனையைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *