Breaking News

தப்லீக் ஜமாத்தினர் விடுதலை! களத்தில் தமுமுக வழக்கறிஞர் குழு

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தமுமுக வழக்கறிஞர் குழு கவனித்து வருகிறது.

காஞ்சிபுரம் காவல்துறையால் பொய் வழக்கு போடப்பட்டிருந்த இந்தோனேஷிய தப்லீக் ஜமாத்தினர் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த பதினோரு பேர் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். இறைவன் நாடினால் அனைவரும் விரைவில் சொந்த நாடு திரும்ப உள்ளனர்.

வழக்கறிஞர்கள் தமிழினியன், துரைமுருகன், ஆசிப் ஷெஹ்ஜாதா ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *