Breaking News

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகி தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் இன்று மரணித்த செய்தி கடும் துயரத்தை அளிக்கின்றது.

25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசிய போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களது நேர்காணல் குறித்து சென்னை ஆனந்த் திரையரங்கில் ஒரு திறனாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் சாகுல் ஹமீது. ஐயா பழ. நெடுமாறன் எழுதிய தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்தற்காக்கத் தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் ஹமீது.

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்றும் பாசமும் கொண்ட போராளியாகச் செயல்பட்ட சாகுல் ஹமீது அவர்கள் அனைவருடனும் மிகுந்த நேசத்துடன் பழகிய இனிய மனிதர். சாகுல் ஹமீது அவர்களின் மரணம் தமிழை நேசிக்கும் அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் நாம் தமிழர் கட்சியின் அன்பர்களுக்கும். அவரது குடும்பத்தாருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்

Check Also

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *