இன்னைக்கு ஆட்சியை வழிநடத்தறதே திமுகதான்.. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுட்டு வர்றாங்க” என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் அதிமுக அரசுக்கு விடுத்துள்ளார்.
2வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை சில நாட்களாகவே தமிழகத்தில் எழுந்து வருகிறது.. “இல்லை, இல்லை.. எம்ஜிஆர் சொன்ன மாதிரி திருச்சியைதான் தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்று மாற்று கோரிக்கை எழுகிறது.
இவைகளுக்கு நடுவில் “நாங்கள் மட்டும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்” என்று கோயம்புத்தூர்காரர்கள் கிளம்பி விட்டனர்.. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் 2வது தலைநகரம் குறித்து பேசிவரும் நிலையில், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் புது விஷயத்தை முன்வைத்தார். “தமிழ்நாட்டுக்கு 2வது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்கு தேவையில்லையா? இந்தியாவின் 2வது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்” என்றார்.
இப்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா, திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூரை அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. இவ்வளவு நாள் இல்லாமல், எதற்காக ஜவாஹிருல்லா இப்படி கோரிக்கையை விடுத்தார்? என்ன காரணம் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை அவரிடம் கேட்டறிந்தோம்.. “ஒன் இந்தியா தமிழ்” சார்பாக நமக்கு அளித்த சிறப்பு பேட்டிதான் இது:
திடீர்னு தலைநகராக ஆம்பூரை கேட்கிறீர்களே? என்ன காரணம்?
திருப்பத்தூர் மாவட்டம் என்று இருப்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.. ஆனால், தலைநகராகதான் ஆம்பூரை கேட்கிறோம்.. ஒரு மாவட்டத்தின் தலைநகரம் என்றால் ஓரளவுக்கு வசதியுள்ள தலைநகரமாக அது இருக்க வேண்டும்.. அந்த வசதிகள் எல்லாமே ஆம்பூரில் உள்ளது.. திருப்பத்தூரை பொறுத்தவரை, ஆம்பூர், வாணியம்பாடியுடன் ஒப்பிடும்போது பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, இரண்டிலுமே குறைவுதான்.. மிக அதிக தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் இருக்கு… திருப்பத்தூர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட நகரம் ஆம்பூர்தான்.. வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடியதும் ஆம்பூர்தான்.. ஆம்பூரில் 6 வழி தேசிய நெடுஞ்சாலையும் கடக்கிறது.. அதனால் திருப்பத்தூருக்கு தலைநகராக ஆம்பூர் அறிவிக்க வேண்டும் என்பதே சரி.
விசிகவும் தமுமுகவும் ஒன்றுதான் என்று திருமாவளவன் உங்களை பாராட்டி பேசியிருக்கிறாரே?
தமுமுகவின் வெள்ளி விழாவில் தோழர் திருமாவளவன் அப்படி பேசியிருந்தார்.. மனிதநேய மக்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பே, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது.. தமமுகவுக்கும், விசிகவுக்குமான உறவு அப்போதிருந்தே தழைத்து வருகிறது.. தனிப்பட்ட முறையிலும் சரி, கூட்டணியிலும் சரி, நல்ல இணக்கமான உறவு வலுவாகவே இருக்கிறது.
நீட் தேர்வு ரத்தாகுமா? உங்க கட்சி சார்பா எந்த மாதிரியான எதிர்ப்புகளை தெரிவிக்கிறீர்கள்?
மருத்துவ தலைநகரம் சென்னை என்கிறார்கள்.. இப்போ சென்னையில் இருக்கிற எந்த டாக்டர்களும் நீட் தேர்வு எழுதி டாக்டர்களாக வரவில்லை.. அனிதா போன்ற கிராமப்புற மாணவர்கள் டாக்டர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்கான சதியின் வெளிப்பாடாகதான் இதை பார்க்கணும்.. இந்த நுழைவு தேர்வுக்கென்று நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகளை ஆரம்பிச்சிட்டாங்க.. இதை சாமான்ய குடும்ப பிள்ளைகளால் படிக்க முடியாது. நீட் தேர்வு என்பதே அவசியமில்லாதது.. ஏன் பிளஸ் தேர்வு நடத்தறீங்க? இதுக்கு நேரடியாக போட்டி தேர்வே நடத்திட்டு போகலாமே?
புதிய கல்வி கொள்கை என்பதே பிஏ., பிஎஸ்ஸி போன்ற வகுப்புகளுக்கே நுழைவு தேர்வு எழுதணும்னு சொல்றதே வணிகமயமாக்கக்கூடிய சூழல்தான்.. அதிலும் ஆன்லைன் கல்விதான் பிரதானப்படுத்தப்படுகிறது.. இந்தியாவில் இருக்கக்கூடிய மக்களில் 28 விழுக்காடுதான் ஸ்மார்ட் போன் பயன்படுத்துறாங்க என்று அரசு ஒரு புள்ளி விவரம் சொல்லுது.. மொத்தமா 28 விழுக்காடு என்றால், அதில் மாணவர்கள் எவ்வளவு பேர் இருப்பாங்க? இந்த சுதந்திர இந்தியா இந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னா, அது கிராமப்புறங்களில் நம் கல்வியை கொண்டு போய் சேர்த்ததால்தான்! தற்போது மொழி திணிப்பும் நடக்கிறது.. அதை தமிழ்நாடு வலுவாக எதிர்த்தாலும், அதையும்தாண்டி, எல்லாமே வணிக மயம், எல்லாமே பெருமுதலாளிகளுக்கான இடமாக மாறிவிட்டது.. அதுபோலவே, கல்வியையும் இந்த மோடி ஆட்சி மாற்றிவிட்டது. இதன்காரணமாக, விரைவில் கல்வி பெறக்கூடிய உரிமையை இழக்க போறாங்க சுதந்திர நாட்டின் குடிமக்கள்!
எடப்பாடி அரசு எப்படி செயல்படுதுன்னு நினைக்கிறீங்க? நிறைய அதிரடி அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறதே?
இந்த நோயை எதிர்கொள்ள அரசு எச்சரிக்கையாக செயல்படணும்.. அதே நேரத்துல மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கிறார்கள்.. இப்போ அறிவித்ததை முன்கூட்டியே செய்திருக்கலாம்.. ஏன்னா, இ-பாஸ் பல மாநிலங்களில் எடுத்தும், இங்கு ரத்து செய்யப்படாமல் இருந்தது.. எதிர்க்கட்சி தலைவர் அழுத்தம் தந்த பிறகும், அரசியல் காரணங்களை பல சொல்லி கொண்டிருந்தார்கள். முதல்ல, மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும்தான் போக்குவரத்து என்று சொன்னது எந்த வகையில் நியாயம்? என்று தெரியவில்லை. கொள்ளிடம் பாலத்தின் ஒரு பகுதி நாகையில் இருக்கு.. இன்னொரு பகுதி கடலூர் மாவட்டத்தில் இருக்கு.. அந்த பாலத்தை எப்படி கடக்கிறது? ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் அந்த பார்டரில் இருந்து இறங்கி நடந்து போக கூடிய சூழல் ஏற்பட்டது.. அதனால் வெளியான அறிவிப்புகள் எல்லாம் அறிவுப்பூர்வமான செயல்பாடாக தெரியவில்லை.. இப்போது பஸ் ஓடும் என்று சொல்லி இருக்காங்க.. ஆனால் இதை ஏற்கனவே அறிவித்திருக்கலாமே என்பதுதான் என் கருத்து.
திமுக செயல்பாடு எப்படி இருக்கு?
https://tamil.oneindia.com/news/chennai/jawahirullah-praises-dmk-for-its-tireless-work-towards-people-396523.html