Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் மரணம் – பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்த குமார் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

கடுமையான உழைப்பால் உயர்ந்து ஒரு பெரும் வணிக நிறுவனத்தை உருவாக்கிய வசந்த குமார் ஒரு போதும் தனது தொடக்க காலத்தை மறவாதவர். இதன் விளைவாகத் தான் அடிதட்டு மாணவர்களுக்கு டியூசன் நிலையங்களை தொடக்கியவர். நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கியவர்.
ஒரு அரசியல் கட்சி தலைவராக மதச்சார்பின்மையில் வலுவான பற்றுடையவராகச் சிறந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயலாற்றினார். நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வசந்த குமார் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். சிறப்பான முறையில் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகச் சளைக்காமல் குரல் கொடுத்தவர் வசந்த குமார்.
கொரோனா காலகட்டத்திலும் தனது தொகுதியில் மக்களுக்குச் சளைக்காமல் உதவிகளைச் செய்து வந்தவர் வசந்த குமார்;.
வசந்த குமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பு. தமிழகம் ஒரு தலைசிறந்த மக்கள் தொண்டரை இழந்து விட்டோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்  காங்கிரஸ் கட்சியின் தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *