Breaking News

நாகூரில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் நாகை மாவட்டம் நாகூர் நகரில் மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை இணைத்துக் கொண்டனர்.புதிதாக தாய் கழகத்தில் இணைந்தவர்கள் மத்தியில் மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் நிஜாமுதீன, மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரபீக், மாவட்ட பொருளாளர் s.முகம்மது இஸ்மாயில், மாவட்ட துணை தலைவர் H முஸ்பா மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாவட்ட அணி நிர்வாகிகள் நாகூர் நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *