Breaking News

அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

அரியலூர் மாவட்டம் கோவிந்த புத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் கோவிந்த புத்தூரில் தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் பாசில் அன்வாரி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமுமுக கடந்து வந்த பாதை குறித்தும் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் மமக மாவட்ட செயலாளர் M.சாகுல் ஹமீது உரை நிகழ்த்தினர். தமுமுக மாவட்ட செயலாளர் S.A.ஷேக் இப்ராஹிம் அன்வாரி அவர்கள் கிளை அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விளக்க உரையாற்றினார்.அரியலூர் மாவட்ட தமுமுக ஊடகப் பிரிவு செயலாளர் J.முஹம்மது முஸத்திக் நன்றியுரை கூறினார். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.முகமது இஸ்மாயில் மற்றும் புதுச்சாவடி கிளை து.தலைவர் A.S.R.சக்கில் அகமது ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருச்சி சவுக்கில் தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *