Breaking News

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளரை சந்தித்த கள்ளக்குறிச்சி தமுமுக மமக நிர்வாகிகள்

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை உறவினர்கள் வாங்குவது சம்பந்தமாக வருவாய்த் துறையினர், காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் என இவர்கள் மாறி மாறி ஒரு துறையிலிருந்து இன்னொரு துறையினருக்கு பொறுப்பு சாட்டி அலக் கழிக்கிறார்கள்.இதனால் உயிர் இறந்தவர்களின் உடல்களை வாங்குவது சம்பந்தமாக துயரத்தில் இருக்கும் அவர்களது உறவினர்கள் மேலும் துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே மருத்துவமனைகளில் அனைத்து துறையின் சார்பாக ஒருங்கிணைந்த ஒரு அதிகாரியை நியமித்து அவர் அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது தமுமுக மமக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் A.பசல் முஹம்மது, திருக்கோவிலூர் வழக்கறிஞர் R.முஹம்மது அலி கான், திருக்கோவிலூர் அஹலே சுன்னத் ஜாமாஆத் நிர்வாகி M.அப்துல் ரஷீத், திருக்கோவிலூர் நகர தொண்டரணி செயலாளர் K.அர்ஷத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *