Breaking News

மானியம் ஆடூரில் தமுமுக வெள்ளி விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள்

கடலூர் தெற்கு மாவட்டம் மானியம் ஆடூர் நகரம் சார்பாக தமுமுக 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட தலைவர் SH.அப்துல் சமது அவர்களின் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் SMJ.முகமது அஸ்லாம், மமக மாவட்ட செயலாளர் F.முகமது நுமான், மாவட்ட பொருளாளர் AV.அப்துல் நாசர் ஆகியோரின் முன்னிலையில் ஊர் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கபட்டது. இதில் சிறப்பு அழைப்பார்களாக மாநில செயற்குழு உறுப்பினர்கள் அய்யூப், நூருல் அமின் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் அபுல் ஹசன், கொள்ளுமேடு ஷபிக்குர் ரஹ்மான்,ஹாஜா நஜிமுதீன்,ஆடூர் நஜிர்அகமது மற்றும் நகர நிர்வாகிகள் தலைவர் முஜிபுர் ரகுமான், தமுமுக கிளை செயலாளர் அமினுல்லாஹ், மமக கிளை செயலாளர் சபியுல்லாஹ், நகர துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *