Breaking News

மார்த்தாண்டம் RTO-வை கண்டித்து போராட்டம் நடத்திய தமுமுக மமக

காணாமல் போன தமுமுக அரக்கட்டளைக்கு சொந்தமான குளச்சல் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு 50000 ரூபாய் லஞ்சம் பொற்றுக்கொண்டு FC காண்பித்த மார்த்தாண்டம் RTO-வை கண்டித்தும், இதற்கு உறுதுணையாக இருந்த SRS வாகன பயிற்ச்சி பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யக்கோரியும் கோழிப்போர்விளை பகுதியில் இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கன்னியாக்குமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தமுமுக மமக தலைவர் ஜிஸ்தி முஹம்மது தலைமையில் நடைபெற்றது.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது, மமக மாவட்ட செயலாளர் உவைஸ் , தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் சித்தீக் , மமக மாவட்ட துணை செயலாளர் நாசர் , மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அல்அமீன், மாநில SMI துணை செயலாளர் சுல்பிக்கர் அலி , SMI மாவட்ட செயலாளர் பைரோஸ் காஜா , முன்னாள் மாவட்ட தமுமுக மமக பொருளாளர் குளச்சல் சுலைமான் ஊடகபிரிவு மாவட்ட செயலாளர் அக்பர், இளைஞரணி மாவட்ட செயலாளர் சுல்பிக்கர் மற்றும் தேங்காய்பட்டணம் கிளை, தக்கலை கிளை, திருவிதாங்கோடு கிளை, குளச்சல் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் அணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். காவல்துறையால் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Check Also

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *