Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் எம்.பி அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம்

இக்கடிதம் தங்களை சீரிய உடல் நலத்துடனும் சிறப்பான உணர்வுகளுடன் சந்திக்க பிரார்த்தனை புரிந்து தொடங்குகிறேன்.

நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் வெற்றி பெற்ற செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. ஒரு இக்கட்டான சூழலில் மதிநுட்பமாக ஒரு கூட்டணியில் இடம்பெற்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வழிவகுத்துள்ளீர்கள். தொடர்ந்து இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அமைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட தாங்களும் தங்கள் கட்சியினரும் மென்மேலும் சிறப்பாக பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

தங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமுமுக வெள்ளி விழா மாநாடு வாழ்த்துரை – பி.எம்.பஷீர் அஹமத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *