Breaking News

விழுப்புரம் கோட்டகுப்பத்தில் கழக கொடிகள் ஏற்றப்பட்டு, கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோட்டகுப்பம் பேரூர் கிளையின் சார்பாக பல இடங்களில் கழகத்தினுடைய கொடி ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக
மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன், மமக
மாவட்ட செயலாளர் திண்டிவனம்
கே.சான்பாஷா, தமுமுக மமக மாவட்ட துணைத்தலைவர் திண்டிவனம் சே.அலாவுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் கோட்டகுப்பம் அ.அஸ்ரப்அலி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். வானூர் ஒன்றிய நிர்வாகிகள், கோட்டகுப்பம் பேரூர் கிளை நிர்வாகிகள், முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சி ரகமத்து நகர், பரகத் நகர், ஜம்யத் நகர், இந்திரா நகர் பகுதி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Check Also

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் பெருநகரம், பல்லாவரம், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *