Breaking News

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

கேரள நிலச்சரிவில் சிக்கி தமிழர்கள் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 80 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும், இதுவரை 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுபோன்ற விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மரணமடைந்தவர்களின் தமிழர்கள் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மலைப் பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறைபாடே இதுபோன்ற உயிர்ப் பலிக்கு காரணமாக இருக்கின்றன. எதிர்காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடங்களில் அமைப்பதன் மூலம் இதுபோன்ற விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

விபத்தில் சிக்கிய தங்கள் உறவினர்களைக் காணக் கேரளா செல்வதற்கு விரும்பும் தமிழர்களுக்கு உரிய அனுமதி வழங்க கேரளா அரசு அனுமதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

உயிரிழந்த தமிழக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தைக் கேரள அரசு வழங்க வேண்டும் அதேபோல் தமிழக அரசும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

எம்.எச்.ஜவாஹிருல்லா

 

Check Also

மாநில சுயாட்சிகளை ஒழிக்கும் RSS – பேராசிரியர் ஜவாஹிருல்லா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *