Breaking News

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்! சேலம் கொண்டலாம்பட்டியில் விரைவில் டாஸ்மாக் அகற்றம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் டாஸ்மாக் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தும், அரசு கடையை அகற்றாமல் இருந்த காரணத்தால் 2 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் அவர்கள் கூடிய விரைவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மதுபான கடையை அகற்றாவிட்டால் விரைவில் அறிவிக்கப் படாமல் “பூட்டு போடும் போராட்டம்” நடத்துவோம் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக 08.08.2020 அரசாங்க அதிகாரிகளின் அழைப்பை ஏற்று தமுமுக மமக மாவட்ட தலைவர் A.சையத் முஸ்தபா அவர்கள் தலைமையில் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் A. M. ராஜேஷ் மற்றும் தெற்கு சரக காவல் உதவி ஆணையாளர் ஈஸ்வரன், டவுன் காவல் ஆய்வாளர்
குமார், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணண் ஆகியோருடன் மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் A. சுஹேல் அஹமத்,S. முஹமத் அஸ்ரார், கொண்டலாம்பட்டி பகுதி தலைவர் S.முஹமத் ஜீலான், பகுதி செயலாளர் G. சையத் சலாவுதீன், பகுதி துணைச் செயலாளர் S. சாதிக் பாஷா, கிளைத் தலைவர் சபீர் அஹமத், கிளைச் செயலாளர் மாலிக் ஜான் ஆகியோர் கலந்து கொண்ட அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 10ம் தேதிக்குள் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றிவிடுவதாக அதிகாரிகள் உறுதி மொழி அளித்தனர்.

Check Also

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *