Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கொர்காத்தூர் கிராமத்தைச் சார்ந்த முதியவர் கோரானா நோய் பாதிப்பால். மரணம் அடைந்தார். இறந்த முதியவரின் மகன் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி. செய்யாறு நகரம்
நிர்வாகத்திடம் தனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்;
H.ஜமால் அவர்கள் தலைமையில் செய்யாறு நகர நிர்வாகிகள் H. கமால்
M .ஜஹாங்கீர் R ஷரிப்
ராஜா பாஷா B.இம்ரான் சல்மான் R.தப்ரேஸ் ஆகிய சகோதரர்கள் அந்த கிராமத்திற்கு சென்று இறந்த அந்த முதியவரை நல்லடக்கம் செய்ய உதவி செய்தனர் அக்கிராம மக்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *