Breaking News

கன்னியாகுமரி மாவட்ட தமுமுக சார்பில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக கபசுரக் குடிநீர் குமரி மாவட்ட காஞ்சாபுரம், பூத்துறை , நித்திரவிளை , நம்பாளி , நடைக்காவு, வாவறை ஆகிய பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அல்அமீன் முன்னிலையில் நம்பாளி சந்திப்பில் மாவட்ட மமக துணை செயலாளர் நாசர் மற்றும் நித்திரவிளை சந்திப்பில் மாவட்ட தமுமுக மமக பொருளாளர் நவாஸ் அவர்களும் துவங்கி வைத்தனர்.

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது , தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் சித்தீக் , தமுமுக மாவட்ட துணை செயலாளர் அலிஅக்பர், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் நாஞ்சில் அக்பர் மற்றும் தேங்காய்பட்டணம் கிளை , திருவிதாங்கோடு கிளை, தக்கலை கிளை, அழகியமண்டபம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

Check Also

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *