Breaking News

தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின்
சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!.


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் அன்பு சகோதரருமான தொல் திருமாவளவன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி திருமதி பானுமதி அம்மையார் அவர்கள் சென்னையில் இன்று மரணமடைந்தர்ர் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

சகோதரர் திருமாவளவன் மீது மிகுந்த அக்கறையும், அன்பும் வைத்திருந்த பானுமதி அம்மையார் அவர்கள் தனக்கு பிறகு தனது தம்பி திருமாவளவனை யாரிடம் விட்டு செல்வது என்று தினமும் நினைத்து வருந்தியுள்ளார்.

ஒரே சகோதரியை இழந்து வாடும் சகோ. திருமாவளவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Check Also

மாநில சுயாட்சிகளை ஒழிக்கும் RSS – பேராசிரியர் ஜவாஹிருல்லா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *