Breaking News

மதுக்கடைகளை மூடக்கோரி கன்னியாகுமரியில் தமுமுக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, குறிப்பாக கடற்கரை கிராமங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாகி வருகிறது. அதற்கு காரணமான டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 03/08/2020 காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது, மமக மாவட்ட செயலாளர் உவைஸ், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் நவாஸ் கான், சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாநில துணை செயலாளர் சுல்பிக்கர், மாவட்ட துணை தலைவர் சித்திக், மாவட்ட துணை செயலாளர்கள் அலி அக்பர், நாசர், சக்கீர் , நிசாம் மற்றும் அணி நிர்வாகிகள் அல் அமீன் , பைரோஸ் காஜா, நாஞ்சில் அக்பர், திருவை சுல்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை பிரதிநிதி காதர் முகைதீன் கண்டன உரை நிகழ்த்தினார். நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சுலைமான் மற்றும் குமரி மாவட்ட மூத்த தலைவர் மீராஷ மற்றும் தேங்காய்பட்டிணம் , குளச்சல் , இரவிப்புதூர்கடை , சுவாமியார்மடம், தக்கலை, திருவிதாங்கோடு, நாகர்கோவில், மாதவலாயம் கிளை நிர்வாகிகள் மற்றும் கழக சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கையை மனுவை வழங்கினார்.

Check Also

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

06.07.2020 மனிதநேய மக்கள் கட்சி திருவாரூர் நகரத்தின் சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மத்திய அரசின் பெட்ரோல், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *