Breaking News

கிட்னி செயல் இழந்தவரை திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு இரண்டு மணி நேரத்தில் கொண்டு சேர்த்த தமுமுக ஆம்புலன்ஸ்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த வினோத் என்ற சகோதரன் இரு கிட்டினி செயல் இழந்து ஆறு மாதகாலமாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலும் திவீர சிகிச்சைக்கு மூன்று மணி நேரத்தில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து நன்னிலம் முன்னால் ரோட்டரி கிளப் தலைவர் ஜானி அவர்கள் மமக மாவட்ட துணைச் செயலாளர் நன்னிலம் அஸர் அவர்களிடம் தொடர்பு கொண்டு செய்தியை கூறிய பின்பு தமுமுக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் அவர்கள் தொடர்பு கொள்ள வாழ்க்கை கிளை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூரில் இருந்து பாண்டிசேரிக்கு 2 மணி நேரத்தில் அந்த சகோதரனை கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிவேகத்தில் மருத்துவமனையில் சேர்த்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

 

Check Also

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு! திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் 15.10.2017 அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 146-வது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *