Breaking News

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் அமைப்பு தொடுத்த வழக்கில் நகர்புற பகுதிகளில் அரசு அறுப்புக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் பிராணிகளை அறுப்பதை தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் தலைமை இயக்குநர் உள்ளிட்ட எட்டு அரசுத்துறை அமைப்புகள் எதிர் தரப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தும் கூட பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அரசு தலைமை தலைமை வழக்கறிஞர் (Advocate General) ஏன் ஆஜராகவில்லை என்ற முக்கிய கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்.
விலங்கு வதைத் தடை சட்டத்தின் 28ம் பிரிவு மிகத் தெளிவாக அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் மத ரீதியான விலங்கு பலிகளுக்குப் பொருந்தாது என்று குறிப்பிட்டிருந்த போதினும் அதனை கவனத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் 2001-2006ல் ஆட்சியில் இருந்த கால கட்டத்தில் கோவில்களில் ஆடு மாடு கோழி அறுப்பதைத் தடை செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது. தியாகத் திருநாளையொட்டி முஸ்லிம்கள் ஆடு அல்லது காளை மாடுகளை பலியிடுவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் யாரும் கேட்டிராத ஒரு வட இந்திய சங்கம் தொடுத்துள்ள இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு முஸ்லிம்களை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. வடவர்களின் நம்பிக்கைகளை தமிழக மக்கள் மீது திணிக்கும் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை திருத்துவதற்கு உடனடியாக தமிழக அரசு தகுந்த சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
7 வட மரைக்காயர் தெரு
சென்னை 600 001
31-07-2020

Check Also

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ் கே யாதவ் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *