Breaking News

கோவை கோதா பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்கு உட்பட்ட கோதா கிளையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் கோதா கிளையின் தலைவர் வசூல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் துவங்கி வைத்தார்கள். பின்னர் முகக்கவசம், கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் நிகழ்வை மாவட்ட தலைவர் இ. அஹ்மது கபீர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட பொருளர் அப்பாஸ், தமுமுக துணை செயலர்கள் ரஜாக், ஆஷிக் அஹ்மத், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞர் அணி செயலாளர் மைதீன், SMI மாநில துணை செயலாளர் அம்ஜத் அலிகான், மத்திய பகுதி தலைவர் இப்ராஹிம், செயலாளர் ரியாஸ், பொருளாளர் பைசல் மற்றும் பகுதி, கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என 600க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *