Breaking News

Daily Archives: July 28, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆண் பெண் இருவர் உடலை அடக்கம் செய்த திருச்சி மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருச்சி தெற்கு மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த பெண்ணையும் திருச்சியை சேர்ந்த ஆணையும் திருச்சி மாவட்ட பொருளாளர் ராஜா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ஜாவித் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து இருவரின் ஜனாஸாவை மீட்டு திருச்சி ஜமாத்துல் உலமா மாவட்ட செயலாளர் இமாம் ரஹீம் அவர்கள் ஜனாசா தொழுகை நடத்தி குடும்பத்தார் முன்னிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஜனாஸாவை அடக்கம் …

Read More »

திருச்சியில் உயிரிழக்கும் வெளி மாவட்ட மக்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசு தற்காலிக இடம் அமைத்து தர வேண்டும்! திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தமுமுக மமக நிர்வாகிகள் கோரிக்கை!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தமுமுக மாவட்ட செயலாளர் அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகமது ராஜா, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திருச்சி ஜாவித் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பிற மாவட்டங்களில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அடக்கஸ்தலம் நிர்வாகிகள் மறுப்பு தெரிவிப்பதை சுட்டிக்காட்டி, அரசாங்கம் நிலத்தை தற்காலிகமாக அமைத்து …

Read More »

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் மற்றும் இளைஞரணி சார்பில் 500-க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஜாகீர் அம்மாபாளையம் கிளை தமுமுக சமூகநீதி மாணவர் இயக்கம் மற்றும் மமக இளைஞரணி சார்பில் ஜாகீர் அம்மாபாளையம் பகுதி பொது மக்களுக்கு மற்றும் வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயன் அடைந்தனர்.  

Read More »

ஷார்ஜாவிலிருந்து திருச்சி வந்தடைந்த பயணிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்த தமுமுக

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பணிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு உதவிகளை செய்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இப்பணியில் ஷார்ஜா தமுமுக மமக நிர்வாகிகள், திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் ஹுமாயூன்,ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திருச்சி ஜாவித் மற்றும் தொண்டரணி மாவட்ட பொருளாளர் சம்சுதீன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Read More »

கடையநல்லூரில் 800-க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தமுமுக சார்பாக வீடு வீடாக 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

Read More »

திருப்பூர் ஊத்துக்குளியில் 1000 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கிய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக பொதுமக்களுக்கு 1000 முக கவசம் சமூக இடைவெளியுடன் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தமுமுக மமக கிளை நிர்வாகிகளுடன், ஊத்துக்குளி பள்ளிவாசல் நிர்வாகிகளும் காவல் துறையினரும் இணைந்து முக கவசம் விநியோகம் செய்தனர்.

Read More »

கோவை கோதா பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திய தமுமுக

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவை வடக்கு மாவட்டம் மத்திய பகுதிக்கு உட்பட்ட கோதா கிளையின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் கோதா கிளையின் தலைவர் வசூல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் துவங்கி வைத்தார்கள். பின்னர் முகக்கவசம், கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் நிகழ்வை மாவட்ட தலைவர் இ. அஹ்மது கபீர் வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட …

Read More »

திருச்சி சவுக்கில் தமுமுக நடத்திய சமுதாய விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டத்தின் சவுக் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை கிளை தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார். சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாநில செயலாளர் வழக்கறிஞர் நூர்தீன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட தமுமுக மமக தலைவர் உதுமான் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Read More »

தேனி அன்னஞ்சியில் 300 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய தமுமுக

தேனி மாவட்டம் அன்னஞ்சி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை அணியின் சார்பாக வீடு வீடாக சென்று பொதுமக்கள் 300 நபர்களுக்கு கபசுர கசாயம் வழங்கி, கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Read More »