திருவாரூர் மாவட்டம் காட்டூரில் புதிதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை அமைக்கப்பட்டு, கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமுமுக மமக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது, மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M. முஹம்மது பைசல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தமுமுக மமக கிளை தலைவராக J.பாசித் அலி,தமுமுக கிளை செயலாளராக I. முஹம்மது ரம்ஜூதீன்,மமக கிளை செயலாளராக H.முஜாஹிதீன், தமுமுக மமக கிளை பொருளாளராக M.முஹம்மது அனீஸ் ரஹ்மன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.