Breaking News

திருவாரூர் புலிவலத்தில் தமுமுக மமக புதிய அலுவலகம் திறப்பு

திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிளை தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் கவிஞர் மு.ஜெ. சித்திக் அவர்கள் தலைமையிலும், மாவட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மு.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கழக கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் புதிய அலுவலகத்தை தலைமை பிரதிநிதி வெங்கலம் அ.ஜபருல்லாஹ் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார்கள். இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாவட்ட பொருளாளர் மு.சுல்தான் இப்ராஹிம் அவர்கள் மரக்கன்று நட்டுவைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அ.சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அ.முகமது நியாசுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் காட்டூர் பைசல் ஆகியோர் உடன் இருந்தனர். கிளை செயலாளரும் புலிவலம் 7 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினருமான மு.நசுருதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வுகள் முடிவடைந்தது.

Check Also

திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்

இந்திய திருநாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *