Breaking News

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் ! மனிதநேய மக்கள் கட்சி அதரவு!!

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் !
மனிதநேய மக்கள் கட்சி அதரவு!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கொரோனா தொற்றல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயல்கிறது.

மின்சார திருத்த சட்டம் , அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் , விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய மக்கள் விரோத, சட்டைகளை மத்திய அரசு இயற்ற நடவடிக்கை எடுத்து வருவதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கிறேன்.

இந்த சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஜூலை 27 அன்று நடத்த உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போரட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளித்து மனிதநேய மக்கள் கட்சியினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளிபடுதுவர்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும்-ஜவாஹிருல்லா உரை

ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *