Breaking News

கடலில் அடித்துச் சென்ற சிறுமியின் உடலை மீட்ட தமுமுக

மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி அருகே கூழையார் கடலில் 21.07.2020 மாலை 3 மணி அளவில் 6 வயது சிறுமி கடலில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் சீர்காழி நகர தமுமுக-வினர் விரைந்து சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேரம் தேடலுக்கு பின்பு மடவாமேடு என்ற இடத்தில் ஜனாஸா கிடைத்தது.

சீர்காழி நகர தமுமுக-வினர் முறையீட்டு அக்குழந்தையின் உடலை மமக தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் அவர்கள் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு குழந்தையை உடல் கூறு ஆய்வு செய்யாமல் தமுமுக-வினரிடம் ஒப்படைக்க உயர் அதிகாரிடம் பேசி அதன் அடிப்படையில் காவல்துறை தமுமுக-வினரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு உடலை ஒப்படைத்து, அதன் பின் உடலை சீர்காழி தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்து உரிய ஜமாத்தினாரிடம், குடும்பத்தாரிடம் ஒப்படைத்து அடக்கம் செய்யப்பட்டது. மமக தலைமை செயற்குழு உறுப்பினர் PSM புஹாரி அவர்களின் தலைமையில் தமுமுக மமக சகோதரர்கள் ஈடுபட்டனர்.

 

Check Also

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காஞ்சி வடக்கு தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *