Breaking News

Daily Archives: July 22, 2020

கொரோனா தொற்றால் இறந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்து சோழபாண்டி ஊரை சேர்ந்த கிருஸ்துவ சகோதரனின் உடலை அடக்கம் செய்த தமுமுக-மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்து சோழபாண்டி ஊரை சேர்ந்த கிருஸ்துவ சகோதரன் இன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோன தொற்றால் இறந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டு கொண்டத்தை அடுத்து மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன் மற்றும் மமக மாவட்ட து.செயலாளர் M.A. ஜெகபர் அலி இவர்களின் குழு தமுமுக & மமக மாவட்ட தலைமை மற்றும் மாவட்ட மருத்துவ …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டை நசீர் என்பவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அதைத்தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவரை நல்லடக்கம் செய் உதவி செய்யும் படி கேட்டுக் கொண்டார்கள் உடனடியாக இது சம்பந்தமாக தமுமுக சார்பாக குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டு அரசு அதிகாரிகளிடம் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அவர்கள் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களிடம் இந்த …

Read More »

கடையநல்லூரில் தமுமுக சார்பாக தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீர்

தென்காசி மாவட்டம் தமுமுக மமக கடையநல்லூர் கிளை சார்பாக 22.07.2020 4வது கட்டமாக புது தெரு முழுவதும் கபசுர குடிநீர் வழங்கபட்டது.

Read More »

நாகூரில் தொடர்ச்சியாக தமுமுக-வில் இணைந்து வரும் மாற்று கட்சியினர்

நாகை மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நாகூர் நகர அலுவலகத்தில் தமுமுக மமக நாகை மாவட்ட தலைவர் A.M.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட துணை செயலாளர் M.சிராஜுதீன், மமக மாவட்ட துணை செயலாளர் J. முஹம்மது சலீம், மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் J. முஹம்மது கமருதீன், நாகூர் நகர பொருப்பளார் A. ஹாஜி அலி, H.பாவா பகுருதீன்,M. மஹதீர் முஹம்மது முன்னிலையிலும் மாற்று கட்சியிலிருந்து விலகி …

Read More »

கொரோனா தொற்றால் 65வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலை காஞ்சிபுரம் தமுமுக மமகவினர் நல்லடக்கம் செய்தனர்

காஞ்சிமாவட்டம் காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றால் 65வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மரணமடைந்தார் அவரின் உடலை தமுமுக மாவட்ட செயலாளர் F.தாஜூதின் மற்றும் மமக மாவட்ட துணை செயலாளர் A ஜாபர் தலைமையில் நல்லடக்க குழுவினர் நம்மொடு தோழர் அல்தாப் காஞ்சி முன்னால் மமக நகர செயலாளர் காஞ்சி ஷேக் தமுமுக மற்றும் அப்பாஸ் காதர் SMIஅப்துல்லா முபாரக் மன்சூர் ஆகியோர் அடக்கம் செய்தனர்

Read More »

செஞ்சியில் தமுமுக மமக-வில் இணைந்த சகோதரர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமுமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சையத் உஸ்மான் அவர்களின் தலைமையிலும் மாவட்ட,அணி,நகர நிர்வாகிகள் முன்னிலையிலும் தங்களை இணைத்துக் கொண்டனர்.  

Read More »

கடலில் அடித்துச் சென்ற சிறுமியின் உடலை மீட்ட தமுமுக

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கடலில் 21.07.2020 மாலை 3 மணி அளவில் 6 வயது சிறுமி கடலில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் சீர்காழி நகர தமுமுக-வினர் விரைந்து சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேரம் தேடலுக்கு பின்பு மடவாமேடு என்ற இடத்தில் ஜனாஸா கிடைத்தது. சீர்காழி நகர தமுமுக-வினர் முறையீட்டு அக்குழந்தையின் உடலை மமக தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் …

Read More »

கோயம்புத்தூரை சேர்ந்த மாற்று மத சகோதரரை அவரது மத நம்பிக்கை படி இறுதி சடங்கிற்கு உதவிய சிவகங்கை மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்

கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபதி என்பவர் காரைக்குடியில் கார்பென்டர் வேலை செய்யும் போது மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். அவர் ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனலிக்காமல் நேற்று 21.07.2020 இரவு மரணமடைந்தார்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு இன்று 22.07.2020 வருகை தந்த அவரது குடும்பத்தினர் சிவகங்கை நகர தமுமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சிவகங்கையில் இறுதி சடங்கு நடத்த உதவிடுமாறு கேட்டுக் கொண்டனர். தமுமுக …

Read More »

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்த முதியோரின் உடலை அடக்கம் செய்த திண்டிவனம் தமுமுகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியோர் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தார் அங்கு அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதில். (Negative)நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்.அவர் மூச்சுத்திணறல் காரணமாக வஃபாத் …

Read More »