மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று 21.07.2020 காலை வஃபாத் ஆனார்கள். அவர்களின் நல்லடக்கம் ஆம்பூரில் நடைப்பெற்றது.
நல்லடக்கத்தில் கலந்துக்கொண்ட பிறகு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.ஜைநுல் ஆபிதீன், அச்சிறபாக்கம் ஷாஜஹான் ஆகியோர் அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதுல் கூறினர்.
யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்மதி தருவாய் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் கடந்து செல்கிறேன்