Breaking News

திருப்பூர் வடக்கு தமுமுக மமக அலுவளகத்திற்கு வருகை தந்த தப்லிக் சகோதரர்கள்

திருப்பூர் தப்லீக் ஜமாத் சகோதரர்கள் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்திற்க்கு வருகை தந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர். கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பான பணி செய்தமைக்கும்
தற்ப்போதுவரை மக்களுக்காக களப்பணியாற்றிக் கொண்டு இருக்கும் தமுமுக மமக-விற்க்கு அல்லாஹ் உயர்ந்த கூலியை தருவானாக என்று துஆவோடு பாராட்டினர்.

மேலும் டெல்லியில் இருந்த ஜமாத் சாத்திகள் தமிழகம் வர மிகப்பெரும் முயற்ச்சிகளை மேற்க்கொண்டு குரல் கொடுத்ததோடு, வெளிநாடு சாத்திகள் தங்களது நாடு திரும்ப நெருக்கடியிலும் தீர்வு கான சட்டத்தின் மூலமாக போராடிக்கொண்டு இருக்கும் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களிடம் தொடர்புக் கொண்டு பேசியதாகவும், அவர்களை விரைவில் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் நசீர்தீன், மமக மாவட்ட செயலாளர் அபுசாலி, மாவட்ட துணைச் செயலாளர் சபிர், மமக மாவட்ட துணைச் செயலாளர் சர்புதீன்,மாவட்ட மருத்துவஅணி செயலாளர் தமிம், SMI மாவட்ட செயலாளர் ஷேக் முகமது ,மாவட்ட ஊடகபிரிவு செயலாளர் இர்பான், IPP மாவட்ட துணை செயலாளர் தஸ்தகீர், மாவட்ட SMI துணை செயலாளர் ஆசிக், தொண்டரனி செயலாளர் சதாம் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Check Also

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்து விட்டார் அவரது உடலை அடக்கம் செய்த செங்கை மாவட்ட தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பெரும்பாக்கம் குலோபல் மருத்துவ மனையில் மரணித்து விட்டார்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *