Breaking News

Daily Archives: July 17, 2020

வேடசந்தூர் நகரத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசம் வழங்கிய தமுமுகவின் மாணவர் பிரிவான சமூக நீதி மாணவர் இயக்கம்

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நகர தமுமுக வின் மாணவர் பிரிவான சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்ரும் மற்றும் முக கவசம் வழங்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் தமுமுக மமக நகர நிர்வாகிகளும் மற்றும் SMI மாணவர்களும் கலந்துகொண்டனர்

Read More »

சிவனடியார் மவுண்ட் கோபால் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரியாலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் காவல் நிலையத்தில்  தமுமுக சார்பில் புகார் மனு

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன அதில் குறிப்பாக சிவனடியார் மவுண்ட் கோபால் எல்லை மீறி பதிவு செய்வது குறித்து அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் காவல் நிலையத்தில்  காவல்துறை அதிகாரி  இடத்தில் அரியலூர் மாவட்டத் தலைவர் M.Hகமாலுதீன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.. இதில் அரியலூர் மாவட்ட மனித நேய …

Read More »

நெல்லை மாவட்ட தமுமுக சார்பில் காவல்துறை கமிஷ்னரிடம் புகார் மனு அளித்தனர்

நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி அவதூறாகப் பேசியும் திருக்குர்ஆன்ஐ கொச்சை படுத்தி பேசிவரும் கல்யாணராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நெல்லை மாவட்ட தமுமுகவின் சார்பில் நெல்லை மாநகர காவல்துறை கமிஷ்னர் திரு தீபக் டமோதர் ஐ.ஜி அவர்களிடம் நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் அலிப்பிலால் மமக மாவட்ட செயலாளர் டவுண் ஜமால் …

Read More »

கல்யாண ராமன்,மாரிதாஸ், கார்டூனிஸ்ட் வர்மா, கிஷோர் கே சுவாமி ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி குன்றத்தூர் மாங்காடு ஆகிய இருகாவல் நிலையம் உள்ளடங்கி காவல் உதவி ஆணையர் A.C.அவர்களிடம் தமுமுக சார்பில் புகார் மனு!!

சமூக வலைதளம் முகநூல் பக்கம் , யூடியூப்பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள் குறித்தும் , இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றியும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களை பற்றியும் இழிவான முறையில் பதிவிட்டு இருதரப்பினருக்கிடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் , ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும் , தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி , சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் …

Read More »

அக்கரஹாரம் பகுதி பெரிய பள்ளிவாசல் கிளை சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக

ஈரோடு கிழக்கு மாவட்டம் பெரிய அக்கரஹாரம் பகுதி பெரிய பள்ளிவாசல் கிளை சார்பாக கிளை தலைவர் K.J.நிஜாமுதீன் தலைமையில் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் S.முஹம்மத் ரிஸ்வான் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.முஹம்மத் சலீம் கபசுர குடிநீர் கொடுத்து துவங்கி வைத்தார்கள். இதில் தமுமுக ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் M.சையது முஸ்தபா,ஊடகப்பிரிவு துணைச்செயலாளர்கள் J.அன்சர்,G.முஹம்மத் உமர் ,பெரியபள்ளிவாசல் கிளை …

Read More »

வடசென்னை பெரம்பூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் தமுமுக சார்பாக முத்தமிழ் நகரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சுமார் 1200 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நோய் பரவலை தடுக்கும் விதமாக சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா மற்றும் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் உடல் நல குறைவால் உயிரிழந்த பெண் ஒருவரை அடக்கம் செய்த தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் R V நகரை சார்ந்த பெண் ஒருவர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது சிகிச்சை பலனின்றி அரசுமருத்துவமனையில் இறந்தார்.. உறவினர்கள் அடக்கம் செய்ய போதிய ஆட்கள் இல்லை என்று தமுமுக வினரிடம் கூறினார்கள் உடனே தமுமுக சகோதர்கள் உடலை பெற்று பேகம்பூர் கபர்ஸ்தானில் தமுமுக வினர் நல்லடக்கம் செய்தனர்

Read More »

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எடகீழையுரில் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை நல்லடக்கம் செய்த  தமுமுக-மமக தன்னார்வலர்கள்

பொதக்குடி தமுமுக சகோதர்களிடம் கொரோனாவில் உயிர் இழந்த சகோதரன் உடலை அடக்கம் செய்ய BMO அரசு அதிகாரி கேட்டுக்கொண்டதை அடுத்து களத்தில் இறங்கிய தமுமுக சகோதர்கள்.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்து எட-கீழையுர் முன்னால் மத்திய கூட்டுறவு இயக்குனர் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். தமுமுக & மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமுமுக மாவட்ட மருத்துவ அணி ஆலோசனை அடிப்படையில் எட-கீழையுர் ஈடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது    

Read More »

கல்யாண ராமன், சிவனடியான் மவுண்ட் கோபால் ஆகியோர் மீது காஞ்சி மாவட்டம் உத்திரமேரூரில் காவல் நிலையத்தில் தமுமுக புகார் மனு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான வார்தைகளால் பேசிய கல்யாணராமன், சிவனடியார் ஆகியோர் மீது காஞ்சி மாவட்டம் உத்திரமேரூரில் காவல் நிலையத்தில் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் காஞ்சி மாவட்ட தமுமுக பொருளாளர் ஜாஹிர் உசேன் நகர தலைவர் சாதிக்பாட்ஷா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றியம் பேரூர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து பங்கேற்றார்கள்.

Read More »